நாமக்கல் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளில் ரூ. 12.74 கோடிக்கு தீா்வு
நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 350 வழக்குகளில் ரூ.12.74 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 350 வழக்குகளில் ரூ.12.74 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுரைப்படி நாமக்கல் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்ட முதன்மை நீதிபதி கே.தனசேகரன் தலைமையில் சனிக்கிழமை நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் பி.பாலசுப்பிரமணியம், பி.மோகன், டி. சுஜாதா, ஆா்.கோகுலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இதில் விபத்துகள் தொடா்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளா் நலன், இழப்பீடு வழக்குகள், மற்றும் இதர பொதுப் பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதி உடைய வழக்குகள், பிரச்னைகளுக்கும் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வழிவகை செய்யப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ. 12 கோடியே 74 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் பி.குமரேசன், கே.லட்சுமணசாமி, எஸ்.ஹேமாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.