முகப்பு
நாமக்கல்

இரண்டாம் நிலை காவலர் தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 8,538 பேர் எழுதினர்

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமை 8,538 பேர் எழுதினர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி தேர்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதிய தேர்வர்கள்.
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமை 8,538 பேர் எழுதினர். 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 8538 பேர் கலந்து கொள்ளும் (ஆண்கள்-7419, பெண்கள்-1118 மற்றும் திருநங்கை-1) இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் 12.20 மணி வரை, திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெறுகிறது.

விவேகானந்தா கல்லூரி மையத்துக்கு வந்தவர்கள் வாகனங்களை உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் நிறுத்தி விட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர். கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வந்த தேர்வர்கள் வாகனங்களை லட்சுமி காட்டன் மில்ஸ் கார்டனில் நிறுத்தி விட்டு அதற்கு அருகில் உள்ள நுழைவு வாயில் வழியாக கல்லூரி மையத்திற்குள் சென்றனர். 

தேர்வு மையத்திற்குவர ஏதுவாக விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேர்வன்று காலை 6 மணி முதல் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்டது.

தேர்வு மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன் நேரடியாக ஆய்வு செய்தார். காலை 11 மணிக்கு பின்னர் வந்தவர்கள் யாரும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. செல்லிடப்பேசி மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை மையத்திற்குள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →