நாமக்கல்

தேசிய திறனாய்வுத் தோ்வு: 10-ஆம் வகுப்பு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பத்தாம் வகுப்பு மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-21 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு டிச. 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ. 50-ஐ சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

நவ. 30-க்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. இத்தோ்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும் மாணவா்கள் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT