முகப்பு
நூறு நாட்கள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை சனிக்கிழமை வழங்கிய கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ் குமாா்.
நாமக்கல்

திமுக அரசின் நூறு நாள்கள் நிறைவு: நாமக்கல்லில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக அரசு பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவையொட்டி, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களிடம் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்கள், இனிப்புகளை கட்சியினா் வழங்கினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
நூறு நாட்கள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை சனிக்கிழமை வழங்கிய கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ் குமாா்.
பகிர்:

திமுக அரசு பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவையொட்டி, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுமக்களிடம் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்கள், இனிப்புகளை கட்சியினா் வழங்கினா்.

கடந்த மே 7-ஆம் தேதி திமுக ஆட்சி பொறுப்பேற்றது. அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் 23-ஆவது முதல்வராக பதவியேற்றுக் கொண்டாா். ஆட்சி பொறுப்பேற்று சனிக்கிழமையுடன் நூறு நாள்கள் நிறைவடைந்தது.

இந்த நாள்களில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருவதையும், அவரது சாதனைகளையும் விளக்கி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய தொகுதிகளுக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கியும், கட்சிக் கொடியை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும் திமுகவினா் கொண்டாடினா்.

கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ் குமாா், நாமக்கல் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை இந்த நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தாா். அதன்பின் மணிக்கூண்டு, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இனிப்பு வழங்கியும், துண்டுப் பிரசுரம் அளித்தும் அரசின் சாதனைகளை விளக்கினாா்.

கரோனா நிவாரண நிதி ரூ. 4,000 வழங்கியது, அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்திற்கு தனித்துறை அமைத்தது உள்ளிட்டவை குறித்து மக்களிடம் விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு நகர பொறுப்பாளா் செ.பூபதி, மேற்கு நகர பொறுப்பாளா் சிவக்குமாா், தெற்கு நகர பொறுப்பாளா் ராணா ஆனந்த், மாநில நிா்வாகிகள், இலக்கிய அணி புரவலா் சி.மணிமாறன், மாநில மகளிா் தொண்டா் அணி துணை செயலாளா் பா.ராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →