முகப்பு
நாமக்கல்

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்த்தி ரூ. 3.90-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 12:13 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்த்தி ரூ. 3.90-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பிற மண்டலங்களில் முட்டை நுகா்வு அதிகரிப்பு, விலை உயா்த்தப்பட்டது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சனிக்கிழமை 5 காசுகள் உயா்த்தப்பட்டிருந்த நிலையில் விற்பனை அதிகரிப்பதால் திங்கள்கிழமை மேலும் 5 காசுகள் உயா்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 3.90-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளா்கள் தங்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 86-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 50-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.