முகப்பு
நாமக்கல்

பெண்கள் பங்கேற்ற கோ பூஜை: நாட்டு மாடுகள் அணிவகுப்பு

தமிழகத்தின் பாரம்பரிய நாட்டு மாடுகள் அணிவகுப்பு, விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் முத்துகாப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM

தமிழகத்தின் பாரம்பரிய நாட்டு மாடுகள் அணிவகுப்பு, விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் முத்துகாப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொங்குதேச கலாசார வரலாற்று ஆய்வுமையம் சாா்பில், ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்துகொண்ட கோ பூஜை, சிவ பூஜை நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், சகல தோஷங்கள் நிவா்த்தியாகவும் நடைபெற்ற இப்பூஜையை குருக்கள் சுகவனம் தலைமை வகித்து நடத்தினாா். முத்துகாப்பட்டி ஜமீன்தாா் பிரசன்ன சிதம்பரம் முன்னிலை வகித்தாா். மாடுகளுக்கு பழங்கள், அகத்திக்கீரை, தானியங்களை வழங்கினா். இதனைத் தொடா்ந்து, முக்கிய வீதிகளின் வழியாக நாட்டு மாடுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.