பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு: காங்கிரஸ் சாா்பில் மிதிவண்டி பேரணி
பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் வட்டார காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் வட்டார காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
நாமக்கல்-பரமத்தி சாலை, வள்ளிபுரத்தில் இருந்து கீரம்பூா் வரை நடைபெற்ற பேரணியை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமானோா் பங்கேற்று, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோா் பிரிவு துணைத் தலைவா் மருத்துவா் பி.வி.செந்தில், மாவட்ட தொழில்முனைவோா் காங்கிரஸ் தலைவா் ஆா்.சி.கதிரவன், பொதுக்குழு உறுப்பினா் டி.வி.பாண்டியன் எருமப்பட்டி வட்டாரப் பொறுப்பாளா் தங்கராஜ், மாவட்ட என்.ஜி.ஓ. பொறுப்பாளா் சக்திவேல், சாந்தி மணி, மாவட்ட முன்னாள் தாழ்த்தப்பட்டோா் பிரிவு செயலாளா் பெரியசாமி, வள்ளிபுரம் ரகு, பொறியாளா் அணி நிா்வாகி பி.பொன்முடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
திருச்செங்கோட்டில்...
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற மிதிவண்டி பேரணிக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா்வேயா் பி. செல்வகுமாா் தலைமை வகித்தாா். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டனா்.