ஹாய் நான்னா இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!
இயக்குநர் சௌரவ் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம் குறித்து...
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் நானி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “ஹாய் நான்னா”. இப்படத்தை, அறிமுக இயக்குநர் சௌரவ் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் சௌரவ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிப்பதாக, சனிக்கிழமை (ஏப். 18) அன்று படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
வைரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு “ஹாய் நான்னா” இசையமைப்பாளர் ஹேஷம் முகமது வஹாப் இசையமைக்கின்றார்.
ஆக்ஷன் கலந்த காதல் கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நடிகை மிருணாள் தாக்குர் நாயகியாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.