தோல்வியிலிருந்து மீள்வாரா விஜய் தேவரகொண்டா?
ரணபலி வெளியீட்டிற்காக காத்திருக்கும் விஜய் தேவரகொண்டா...
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி திரைப்படம் நாளை (அக்.16) திரையரங்குகளில் வெளியாகிறது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகத் தோல்விப்படங்களே அமைந்துள்ளன. சில வெற்றிபெற்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்ததால் பெரிய விமர்சனங்களைச் சந்திக்கவில்லை.
ஆனாலும் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த லைகர், குஷி, பேமிலி ஸ்டார், கிங்டம் ஆகிய திரைப்படங்கள் தோல்விப்படமாகின. இதில், கிங்டம் ஓரளவு வணிகத்தைச் செய்தது.
Advertisement
Advertisement
தற்போது, இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ரணபலி என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் நாளை (அக். 16) திரையரங்குகளில் வெளியாகிறது.
தொடர்ந்து, தோல்விப்படங்களைக் கொடுத்த விஜய் தேவரகொண்டா ரணபலியில் பலியாகாமல் மீள்வாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பின் தன் மனைவி ரஷ்மிகாவுடன் இணைந்து நடித்துள்ளதால் சில செண்டிமெண்ட் காரணங்களும் கைகொடுக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அடுத்ததாக, விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரௌடி ஜனார்தன் திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Actor Vijay Deverakonda's film 'Ranabali' is set to release in theaters tomorrow (Oct 16).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.