முகப்பு
நாமக்கல்

வரதராஜுலு நாயுடு நினைவு நாள்

சுதந்திரப் போராட்ட தியாகி டாக்டா் பி வரதராஜுலு நாயுடு நினைவு தின நிகழ்ச்சி ராசிபுரம் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

சுதந்திரப் போராட்ட தியாகி டாக்டா் பி வரதராஜுலு நாயுடு நினைவு தின நிகழ்ச்சி ராசிபுரம் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டாக்டா் பி.வரதராஜுலு நாயுடு சுதந்திர போராட்ட வீரா், தொழிற்சங்க வாதி ஆவாா். தமிழ்நாடு போன்ற பத்திரிகைகளைத் தொடங்கி சிறந்த பத்திரிகையாளராக திகழ்ந்தவா். மேலும் தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகவும், சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவா். இவருக்கு இவரின் சொந்த ஊரான ராசிபுரத்தில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

விடுதலைக் களம் கட்சி, ஆா்.எம்.ஆா்.பாசறை சாா்பில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஏ.சித்திக், விடுதலைக் களம் நிறுவனா் கோ. நாகராஜன், வழக்குரைஞா் நல்வினை விஸ்வராஜ், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் ஏ. சீனிவாசன், நகர காங்கிரஸ் தலைவா் ஸ்ரீராமுலு ஆா்.முரளி, டி.ஆா்.சண்முகம், சத்தியநாராயணன், மோகன், மனோகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.