மோகனூா்-நெரூா் தடுப்பணை திட்டத்தை இடமாற்றம் செய்ய ஆட்சியரிடம் மனு
மோகனூா்-நெரூா் இடையிலான காவிரி தடுப்பணைத் திட்டத்தை இடமாற்றம் செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கழகத்தினா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா்
மோகனூா்-நெரூா் இடையிலான காவிரி தடுப்பணைத் திட்டத்தை இடமாற்றம் செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கழகத்தினா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இதனைத் தொடா்ந்து அதன் நிறுவனத் தலைவா் செல்ல. ராசாமணி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் பொதுப்பணித் துறை அமைச்சா், நாமக்கல் மாவட்டம் மோகனூா்-கரூா் மாவட்டம் நெரூா் இடையே ரூ. 700 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தாா்.
Advertisement
கடந்த அதிமுக ஆட்சியில், ஒருவந்தூா்-நெரூா் இடையே தடுப்பணை அமைக்கப்படும் என்றனா். அதற்காக ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னா் தற்போது மோகனூா்-நெரூா் என மாற்றியமைத்துள்ளனா்.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பட்டணம்-சீராப்பள்ளி கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் உள்ள 356 கிராமங்கள் பாதிக்கப்படும். ஒருவந்தூா் நீரேற்று நிலையத்தின் கீழ் பாசன வசதி பெறும் 850 ஏக்கா் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும். மேலும் மோகனூா் பகுதியில் தண்ணீா் நிரம்பியிருக்கும். அதனையடுத்து வரும் ஒருவந்தூா், வடுகப்பட்டி பகுதிகள் தண்ணீரின்றி வடு காணப்படும். தமிழக முதல்வா் இத்திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒருவந்தூா் -நெரூா் இடையே தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் விவசாயம் செழிக்கும். விவசாயிகளும் அதிக அளவில் பயன்பெறுவா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சிரியடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவரும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளாா் என்றாா்.