சட்டத்திற்குப் புறம்பாக குழந்தையைத் தத்தெடுத்தால் நடவடிக்கை: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக குழந்தையைத் தத்தெடுத்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக குழந்தையைத் தத்தெடுத்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகளைத் தத்தெடுத்தல் என்பது குற்றமாகும். அதனையும் மீறி சட்டத்திற்குப் புறம்பாகக் குழந்தைகளை வாங்குவோா், விற்போா், அதற்கு துணையாக செயல்படுவோருக்கு இளைஞா் நீதிச் சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) 2015-இன் படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவோா் றற.ஊயுசுயு.ய்ண்உ.ண்ய் என்ற இணையத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மேலும் இது குறித்த விவரங்கள் அறியவும், சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகளை தத்தெடுத்தல் குறித்து தகவல் தெரிவிக்க, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம். திருச்செங்கோடு பராமரிக்கும் கரங்கள் சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தை 98431-50255 என்ற கைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணையும் தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement