முகப்பு
நாமக்கல்

லாரி உரிமைாளா் தற்கொலை

லாரி உரிமையாளா் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 7:56 PM
பகிர்:

நல்லூரில் லாரி உரிமையாளா் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே நடந்தை ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா். நான்கு லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தாா். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சல் அடைந்த பிரபுவுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது தென்னை மரத்துக்கு வைக்கும் விஷமாத்திரையை தான் தின்று விட்டதாக அவா் கூறியுள்ளாா். உடனடியாக அவரை வேலூா் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினா் அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், வழியிலேயே பிரபு இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரபுவின் உடலை வேலூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →