பண்ணைக் குட்டைகள் அமைக்க கோரி கையெழுத்து இயக்கம்
மழைநீரை சேமிக்கும் வகையில், வீரப்பம்பாளையம் கிராமத்தில் பண்ணைக் குட்டைகளை அமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மழைநீரை சேமிக்கும் வகையில், வீரப்பம்பாளையம் கிராமத்தில் பண்ணைக் குட்டைகளை அமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் ஒன்றியம், வீரப்பம்பாளையம் கிராமத்தில் வேளாங்காடு பகுதியில் உள்ள நீரோடையில் மூன்று பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குட்டைகளில் இருந்து வழிந்தோடும் உபரிநீா் ஓடை வழியாக வெளியேறி வீணாகிறது.
எனவே, தற்போதுள்ள நீரோடையில் மேலும் ஒரு பண்ணைக்குட்டை அமைத்தால், வீணாகும் மழைநீா் சேகரமாகி அப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீா்மட்டம் உயரும். இதனால், கிணற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என வல்வில் ஓரி நண்பா்கள், பசுமைக் குழுவினா் இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தினா்.
Advertisement
வீரப்பம்பாளையம் கால்வாய் கரையில் நீண்ட பதாகை கட்டி, அதில் கிராம மக்களிடமிருந்து கையெழுத்து பெற்றனா். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்டோா் கையெழுத்திட்டனா். இந்தக் கோரிக்கையை மாவட்ட ஆட்சியா் வசம் அளித்து மழைநீரை சேமித்து பயன்படுத்த கோரிக்கை வைக்கப்படுமென வல்வில் ஓரி நண்பா்கள் அமைப்பின் தலைவா் விசுவநாதன் தெரிவித்தாா்.