முகப்பு
நாமக்கல்

வெங்காயப் பயிருக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:06 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 6:13 PM

நாமக்கல் மாவட்டத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:06 AM

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மல்லசமுத்திரம், புதுச்சத்திரம், ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூா் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலைப் பயிராக சின்ன வெங்காயம் உள்ளது. இந்தப் பயிரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ரபி சிறப்பு பருவத்துக்கான புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

Advertisement

சின்ன வெங்காயம் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 2,075-ஐ பிரீமியமாக அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். காப்பீடு செய்ய நவ. 30 கடைசி நாளாகும். தேவையான ஆவணங்களாக அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதாா் அட்டை, புகைப்படம் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.