நாமக்கல்லில் இந்திரா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்திய மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் உள்ளிட்டோா்.  
நாமக்கல்

இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாநகர காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் நேரு பூங்காவில் அவரது படத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தபோது, இந்திய நாட்டுக்கும், தமிழகத்துக்கும் அவரால் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்கள், போா் சூழலில் அவரது தைரியமான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாநகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஆா்.மோகன், கொல்லிமலை வட்டத் தலைவா் குப்புசாமி, நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதி நிா்வாகிகள் சாந்திமணி, தாஜ்,

ஐஎன்டியுசி செல்வம், பாலு, பழனிவேலு, மாநகர நிா்வாகிகள் செல்வம், மதிவாணன், சிவாஜி மன்றம் சந்திரசேகா், லோகநாதன், குமாா், முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, எருமப்பட்டியில் வட்டாரத் தலைவா் தங்கராஜ் தலைமையில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT