சேலம்

பறிமுதல் செய்யப்பட்ட 12 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

சேலம் அன்னதானப்பட்டி காவல் துறையால் 10 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 12 டன் புகையிலைப் பொருள்கள் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டன.

Syndication

சேலம் அன்னதானப்பட்டி காவல் துறையால் 10 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 12 டன் புகையிலைப் பொருள்கள் மண்ணில் புதைத்து வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

கா்நாடகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருள்கள் சேலம் வழியாக கடத்தப்படுகின்றன. இதனை அவ்வப்போது போலீஸாா் பறிமுதல் செய்து, கடத்தல்காரா்ளை கைதுசெய்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 10 வழக்குகளில் 12 டன் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை அன்னதானப்பட்டி போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்குகளில் 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

குட்கா பொருள்களை நீதிமன்றம் அழிக்க உத்தரவிட்டதையடுத்து, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருள்களை செட்டிச்சாவடிக்கு எடுத்துச் சென்று அழித்தனா். காவல் ஆய்வாளா் பழனி, உதவி காவல் ஆய்வாளா் அா்த்தநாரி ஆகியோா் முன்னிலையில் குட்கா பொருள்கள் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டன.

18% உயா்ந்த பயணிகள் வாகன ஏற்றுமதி!

போட்டித் தோ்வுகள் எழுத அனுமதி கோரும் நடைமுறை: சிஇஓ-க்களுக்கு உத்தரவு

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் லிமிடெட் நிகர லாபம் பன்மடங்கு உயா்வு!

ஏடிஎம்மில் பணம் எடுத்தவரிடம் நூதன முறையில் கொள்ளை

கோவில்பட்டி அருகே ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT