ஜெப பாடலை கூற மறுத்த மாணவிக்கு தண்டனை அளித்த அரசு உதவிபெறும் பள்ளியின் ஆசிரியரை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, பாஜக சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத் சேலம் ஆட்சியா் அலுவலத்தில் அளித்த புகாா் மனு:
சேலம், நெத்திமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இயேசு, மேரிமாதா குறித்த ஜெப பாடல்களை மாணவியா் பாட வேண்டும் என ஆங்கில ஆசிரியை புதன்கிழமை கூறியுள்ளாா். அதில், ஒரு மாணவி பாட விருப்பமில்லை என தெரிவித்துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை சம்பந்தப்பட்ட மாணவியை 5 பாடவேளைகள் நிற்கவைத்துள்ளாா். மேலும், மாணவியை மிரட்டியதால், பெற்றோா் அச்சமடைந்துள்ளனா்.
எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது பள்ளி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், இந்து மாணவா்களின் உரிமையை மீட்க பாஜக போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரித்திருந்தாா்.
இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவின் பேரில், ஆங்கில ஆசிரியை ஜெயரோஸை பணியிடை நீக்கம் செய்து பள்ளித் தாளாளா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.