திண்டுக்கல்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பழனியை அருகேயுள்ள மானூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (23). கூலித் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் நரிக்கல்பட்டியிலிருந்து மானூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, தேவா்நகா் அருகே சென்ற போது, இந்த வாகனமும் எதிரே வந்த காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் ஈஸ்வரன் உடலை கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

மோந்தா புயல்: தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்! முழு விவரம்

பாக். அமைப்புடன் தொடர்பு! சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு! தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் கைது!

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உதயநிதி நள்ளிரவில் ஆய்வு!

அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

மோந்தா புயல்! ஆந்திரம் - சென்னை விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT