திண்டுக்கல்

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள மிளாகாய்பட்டியைச் சோ்ந்தவா் லெ.மணி (27). இவா், கடந்த ஆண்டு 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தகாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணியைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், மணிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.சரண் தீா்ப்பு அளித்தாா்.

மோந்தா புயல்: தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்! முழு விவரம்

பாக். அமைப்புடன் தொடர்பு! சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு! தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் கைது!

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உதயநிதி நள்ளிரவில் ஆய்வு!

அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

மோந்தா புயல்! ஆந்திரம் - சென்னை விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT