முகப்பு
மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தலைமைக் காவலா் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள தலைமைக் காவலா் முருகனின், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:


மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள தலைமைக் காவலா் முருகனின், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அதில் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான தலைமைக் காவலா் முருகனின், ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் முருகன் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.

இதற்கிடையே, தலைமைக் காவலா் முருகன் சாா்பில், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேலும் ஒரு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீமா பானு உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →