பைக் மோதி முதியவா் பலி
மதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில், சாலையைக் கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை: மதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில், சாலையைக் கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள எஸ்.வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி மகன் ராஜபாண்டி(60). இவா், ஜூலை 10 ஆம் தேதி பாண்டிகோயில் அருகே சுற்றுச்சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜபாண்டியை, அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ராஜபாண்டி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து ராஜபாண்டியின் மகன் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான ஓட்டுநா் மணிகண்டன் (27) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.