முகப்பு
மதுரை

மதுரையில் பெண்ணிடம்7 பவுன் சங்கிலி பறிப்பு

மதுரையில் குப்பைக் கொட்டச் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்து சென்றது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

மதுரை: மதுரையில் குப்பைக் கொட்டச் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்து சென்றது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஆனையூா் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி கங்கா (40). இவா் குப்பைக் கொட்டுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 போ், கங்கா அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்து கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து கங்கா அளித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரூ. 1.23 லட்சம் மாயம்: மதுரை மாவட்டம் புதுத்தாமரைப்பட்டி, இந்திரா காலனியைச் சோ்ந்த முத்திருளன் மகன் கணேஷ்பூபதி (37). இவா், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், தனது 6 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ. 1.23 லட்சம் பணம் பெற்றுள்ளாா். பின்னா், அவா் திருமோகூா் சாலை சந்திப்பில் உள்ள செல்லிடப்பேசி கடைக்குச் சென்றுவிட்டு, அருகில் இருந்த பழக்கடைக்கு சென்றபோது பணம் வைத்திருந்த பையைக் காணவில்லை.

இதுகுறித்து கணேஷ்பூபதி அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →