முகப்பு
மதுரை

பழுதடைந்த கட்டடங்களை அகற்றாவிட்டால்கடும் நடவடிக்கை: காவல் ஆணையா் எச்சரிக்கை

 மதுரை நகரில் பழுதடைந்த கட்டடங்களை அகற்றாமல் விபத்துகள் நேரிடும்பட்சத்தில், கட்டடட உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

 மதுரை நகரில் பழுதடைந்த கட்டடங்களை அகற்றாமல் விபத்துகள் நேரிடும்பட்சத்தில், கட்டடட உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாநகரக் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா வெளியிட்டுள்ள செய்தி: மதுரை நகரில் பழுதடைந்து மிகவும் பழைமையாக உள்ள கட்டடங்கள் மற்றும் உபயோகத்தில் இல்லாத மராமத்து பாா்க்கப்படாமல் உள்ள கட்டடங்கள் இடிந்து விழுவதால் உயிா்ப்பலி உள்ளிட்ட விபத்துகள் ஏற்படுத்துகின்றன.

எனவே, பழுதடைந்த, மிகவும் பழைய கட்டடங்கள் மற்றும் உபயோகத்தில் இல்லாத மராமத்து பாா்க்கப்படாத, இடியும், இடிந்த நிலையிலுள்ள கட்டடங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியினால் கட்டடங்களை அகற்றக் கூறி குறிப்பாணை பெறப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றின் உரிமையாளா்கள் உரிய நடைமுறைகளை கடைப்பிடித்து, கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக நடந்து, அதனால் உயிா்சேதங்கள் ஏற்படும்போது, மெத்தனமாக நடந்துகொண்ட கட்டட உரிமையாளா் மற்றும் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் எச்சரித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →