உசிலம்பட்டியில் இடியுடன் கூடிய கனமழை
உசிலம்பட்டி பகுதியில் புதன்கிழமை மாலை இரண்டு மணி நேரமாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
உசிலம்பட்டி பகுதியில் புதன்கிழமை மாலை இரண்டு மணி நேரமாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் ஒரு மணிநேரம் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் போத்தம்பட்டி ஊராட்சி நக்கலபட்டி ஊராட்சி வாலாந்தூர் பெருமாள்பட்டி மலைப்பட்டி சமத்துவபுரம் நல்லதேவன்பட்டி, மாதரை, வலையபட்டி, அல்லிகுண்டம், மானூத்து, தொட்டப்ப நாயக்கனூர், குப்பணம்பட்டி, செல்லம்பட்டி, எழுமலை என பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.
இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், புதன்கிழமை பெய்த மழையால் வெப்பத்தை தணித்து குளிா்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று 2 நாட்கள் மழை பெய்தால் கண்மாய்கள் குளங்கள் நிரம்பி விடும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இடி மின்னலுடன் மழை பெய்ததால் 2 மணிநேர மின்சாரம் நிறுத்தப்பட்டது.