உசிலம்பட்டி: விவசாயிகள் சாலை மறியல்
உசிலம்பட்டி செல்லம்பட்டி ஒன்றியம் உட்பட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரைஉசிலம்பட்டி: விவசாயிகள் சாலை மறியல்
உசிலம்பட்டி செல்லம்பட்டி ஒன்றியம் உட்பட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியம் உட்பட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெல் அறுவடை செய்து செல்லம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளியில் குவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் செய்ததால் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்ததால் நெல் குவிக்கப்பட்ட இடத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனை அறிந்த விவசாயிகள்செல்லம் பட்டியில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.