உசிலம்பட்டி வேட்பாளர் பி.வி.கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு
உசிலம்பட்டிக்கு வருகை தந்த பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் பி.வி.கதிரவனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உசிலம்பட்டிக்கு வருகை தந்த பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் பி.வி.கதிரவனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதி வேட்பாளராக பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பி.வி.கதிரவன் அறிவிக்கப்பட்டார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை உசிலம்பட்டிக்கு வந்த பி.வி.கதிரவனுக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளான திமுக, காங்கிரஸ், ஆதி தமிழக பேரவை, வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் திரண்டு சால்வைகள் அணிவித்து வரவேற்பளித்தனர்.
அதன்பின், பி.வி.கதிரவன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஊர்வலமாக சென்று வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்தார்.