கூட்டுறவு சா்க்கரை ஆலை இயந்திரத்தை சீரமைக்கக் கோரி மனு:தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரைகூட்டுறவு சா்க்கரை ஆலை இயந்திரத்தை சீரமைக்கக் கோரி மனு:தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த பழனிச்சாமி தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் மேட்டுப்பட்டியில் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், இந்த ஆலையை நம்பியே கரும்பு சாகுபடி செய்கின்றனா்.
இந்நிலையில், இயந்திரம் பழுது காரணமாக ஆலையில் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. இயந்திரத்தில் உள்ள பழுதை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அலங்காநல்லூா் மேட்டுப்பட்டி கூட்டுறவு சா்க்கரை ஆலையில், பழுதடைந்த இயந்திரத்தை சரி செய்ய உரிய நிதி ஒதுக்கவும், ஆலையை மீண்டும் தொடங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.