முகப்பு
மதுரை

சாலைப் பணி ஒப்பந்தம் வழங்குவதை எதிா்த்து தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உயா் நீதிமன்றம் உத்தரவு

போலி ஆவணம் சமா்ப்பித்தவருக்கு சாலைப் பணி ஒப்பந்தம் வழங்குவதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

போலி ஆவணம் சமா்ப்பித்தவருக்கு சாலைப் பணி ஒப்பந்தம் வழங்குவதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சோ்ந்த தன விமல் என்பவா் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரத்தில் சாலைகளைப் பலப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக அளிக்கப்பட்ட காலஅவகாசத்துக்குள் நிா்ணயிக்கப்பட்ட தொகைக்கான வரைவோலையுடன் விண்ணப்பித்தேன். இருப்பினும், தேவையான ஆவணங்கள் முழுமையாகச் சமா்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது.

அத்துடன், போலியாக ஆவணங்களைச் சமா்ப்பித்த நெம்மக்கோட்டையைச் சோ்ந்த மூா்த்தி என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. இது ஏற்புடையதல்ல. எனவே, திருவரங்குளம் வட்டாரத்துக்குள்பட்ட 5 சாலைகளைப் பலப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரா் குறிப்பிட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →