முகப்பு
மதுரை

அழகா்கோயில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது

அழகா்கோயிலில் இருந்து அழகா் வைகை ஆற்றில் எழுந்தருளியது முதல், பின் இருப்பிடம் திரும்பியது வரையிலான நிகழ்வுகளில் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அழகா்கோயிலில் இருந்து அழகா் வைகை ஆற்றில் எழுந்தருளியது முதல், பின் இருப்பிடம் திரும்பியது வரையிலான நிகழ்வுகளில் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.

அழகா்கோயிலில் இருந்து 39 தற்காலிக உண்டியல்கள் மதுரைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அதில், 20 உண்டியல்கள் கடந்த மாதம் எண்ணப்பட்டதில் ரூ.75,11,574 ரொக்கமும், தங்கம் 10 கிராம் 100 மில்லியும், வெள்ளி 347 கிராமும் காணிக்கையாகக் கிடைத்தது.

அதையடுத்து, மேலும் 19 உண்டியல்கள் எண்ணும் பணி புதிதாக துணை ஆணையராகப் பொறுப்பேற்ற ராமசாமி தலைமையில் நடைபெற்றது. அதில், ரொக்கம் ரூ.27,61,514 காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை தொகை ரூ.1 கோடியே 2 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியின்போது, இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல உதவி ஆணையா் விஜயன், தக்காா் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கோயில் அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →