மதுரை

மதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் யானை வளர்ப்பு: யானையை மீட்டு முகாமுக்கு அனுப்பிவைப்பு

DIN

மதுரை: மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் 22 வயதுடைய ரூபாலி என்ற பெண் யானை பீகாரில் இருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கி வரப்பட்டு வளர்க்கப்படுவதால் தொடர்ந்து மதுரை மாவட்ட வனத்துறைக்கு புகார் வந்தது.

இந்நிலையில் புகாரின் அடிப்படையில் 3 வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிர் காப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் யானையை மீட்டு, திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு மதுரை மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை மருத்துவர்கள், காவல்துறையினர் குழுவாக சேர்ந்து யானையை பறிமுதல் செய்ய முயன்றபோது யானையின் உரிமையாளர் யானையை பறிமுதல் செய்யவிடாமல் வனத்துறை அதிகாரி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் யானையின் பாதுகாவலர் திடீரென தலைமறைவானார். யானையை லாரியில் ஏற்றுவதற்கு பாகன் இல்லாமல் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக வனத்துறையினர் போராடி வந்தனர். இந்த நிலையில் மாற்று பாகனை ஏற்பாடு செய்து வனத்துறை அதிகாரிகள் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு யானையை லாரியில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் சட்டவிரோதமாக வைத்திருந்த யானையை வனத்துறை அதிகாரிகள் மீட்ட சம்பவம் மதுரையில்  பரபரப்ரை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT