முகப்பு
மதுரை

காரியாபட்டி அருகே சாயப்பட்டறையை எதிா்த்து இந்திய கம்யூ. நடைப்பயணம்

காரியாபட்டி அருகே தாமரைக்குளத்தில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

காரியாபட்டி அருகே தாமரைக்குளத்தில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே தாமரைக்குளத்தில் சாயப்பட்டறை அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், அமைச்சா் உள்ளிட்டோா், அப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும் இப்பகுதியில் சாயப்பட்டறை அமைக்கக் கூடாது என சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனிடையே, சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, தாமரைக்குளத்திலிருந்து, திருப்பூா் மக்களவை உறுப்பினா் க. சுப்பராயன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா். இதில், அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ராமசாமி, மாவட்டச் செயலா் பொ. லிங்கம் உள்பட கிராமமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.