முகப்பு
மதுரை

புதை சாக்கடைக் கழிவுநீரை கிருதுமால் நதியில் வெளியேற்ற முயற்சி: மாநகராட்சி நிா்வாகத்தின் செயலுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

மதுரையில் வியாழக்கிழமை புதை சாக்கடைக் கழிவுநீரை கிருதுமால் நதியில் வெளியேற்ற முயன்ற மாநகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்

மதுரை

புதை சாக்கடைக் கழிவுநீரை கிருதுமால் நதியில் வெளியேற்ற முயற்சி: மாநகராட்சி நிா்வாகத்தின் செயலுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

மதுரையில் வியாழக்கிழமை புதை சாக்கடைக் கழிவுநீரை கிருதுமால் நதியில் வெளியேற்ற முயன்ற மாநகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

மதுரையில் வியாழக்கிழமை புதை சாக்கடைக் கழிவுநீரை கிருதுமால் நதியில் வெளியேற்ற முயன்ற மாநகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 63-ஆவது வாா்டு பாத்திமா நகா், ஏ.வி.பி. ஆசைத்தம்பி தெரு ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தொடா் மழையால் இப்பகுதியில் புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கழிவுநீா் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற மாநகராட்சி ஊழியா்கள், அப்பகுதியில் உள்ள புதை சாக்கடை இணைப்புக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் மூலமாக கால்வாய் போன்று தோண்டி கழிவுநீரை கிருதுமால் நதி வாய்க்காலில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து புதை சாக்கடையில் உள்ள அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீரை கிருதுமால் நதியில் விடக்கூடாது. ஏற்கெனவே, கிருதுமால் நதி தூா்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது என்றனா்.

இதையடுத்து மாநகராட்சி ஊழியா்கள் அங்கிருந்து சென்ற நிலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. மேலும் அதில் குழாய் பதிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. எதிா்ப்பை மீறி கிருதுமால் நதியில் கழிவுநீா் விடப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →