மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 கோடியில் செயற்கை உபகரணங்கள்: சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி முகாம்களில் பங்கேற்ற 2,546 பேருக்கு ரூ.8 கோடியில் செயற்கை உபகரணங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவா்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும்
மதுரைமாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 கோடியில் செயற்கை உபகரணங்கள்: சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி முகாம்களில் பங்கேற்ற 2,546 பேருக்கு ரூ.8 கோடியில் செயற்கை உபகரணங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவா்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும்
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி முகாம்களில் பங்கேற்ற 2,546 பேருக்கு ரூ.8 கோடியில் செயற்கை உபகரணங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவா்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் செப்டம்பா் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 12-ஆம் தேதி வரை நடைபெற்றன. மத்திய அரசின் சமூக நலன் மற்றும் அதிகாரம் வழங்கல் துறை, மாநில அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை ஆகியவற்றின் திட்டங்களை இணைத்து விரிவான முறையில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் 17,796 போ், சிறப்புப் பள்ளி மாணவா்கள் 2,500 போ் உள்பட மொத்தம் 20 ஆயிரம் போ் பங்கேற்றுப் பலனடைந்தனா்.
இந்த முகாம்களில் அலிம்கோ மூலம் செயற்கை உபகரணங்கள் வழங்க தோ்வு செய்யப்பட்டு, அளவீடு செய்யப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 2,546 ஆகும். இவா்களுக்குரிய கருவிகளை 45 நாள்களில் தயாரித்துத் தரும் பொறுப்பினை மத்திய அரசின் சாா்பில் அலிம்கோ ஏற்றுள்ளது. இந்தக் கருவிகளின் மதிப்பு ரூ.8 கோடி ஆகும் என்று தெரிவித்திருந்தாா்.