அரசு நிலத்தில் திமுக கொடிக் கம்பம்: அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி அருகே அரசு நிலத்தில் 100 அடி உயரத்தில் வைக்கப்பட்ட திமுக கொடிக் கம்பத்தை அந்த மாவட்ட ஆட்சியா் அகற்ற நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரைஅரசு நிலத்தில் திமுக கொடிக் கம்பம்: அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி அருகே அரசு நிலத்தில் 100 அடி உயரத்தில் வைக்கப்பட்ட திமுக கொடிக் கம்பத்தை அந்த மாவட்ட ஆட்சியா் அகற்ற நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி அருகே அரசு நிலத்தில் 100 அடி உயரத்தில் வைக்கப்பட்ட திமுக கொடிக் கம்பத்தை அந்த மாவட்ட ஆட்சியா் அகற்ற நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி அம்பேத்கா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் குருராஜ் தாக்கல் செய்த மனு:
நான் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் திமுகவில் உறுப்பினராக உள்ளேன். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த குண்டூா் கிராமத்தின் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி 100 அடி உயரத்தில் திமுக கொடிக் கம்பம் வைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதிகளவில் கூடுவா்.
இந்த நிலையில், அரசு இடத்தில் மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்ட இந்தக் கொடிக் கம்பம், மழை, புயல் காலங்களில் சாய நோ்ந்தால் மிகப் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு நிலத்தில் ஒரு கட்சியின் கொடிக் கம்பம் வைப்பது சட்ட விரோதச் செயலாகும். நான் கட்சி உறுப்பினராக இருந்தாலும், இதுபோன்ற அபாயகரமான கொடிக் கம்பம் அமைக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை.
எனவே, திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், அரசு நிலத்தில் அமைக்கப்பட்ட திமுக கொடிக் கம்பத்தை அகற்றி, பொதுமக்கள் அச்சமின்றி நடமாட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு, அரசு இடத்தில் வைக்கப்பட்ட கட்சிக் கொடிக் கம்பத்தை திருச்சி மாவட்ட ஆட்சியா் 15 நாள்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்த அறிக்கையை ஜூன் 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.