முகப்பு
மதுரை

மதுரை ரயில்வே அலுவலா்கள் இருவருக்கு ரயில் சேவா புரஸ்கா் விருது

ரயில்வே துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கா் விருதுக்கு மதுரை கோட்டத்தைத் சோ்ந்த ரயில்வே அலுவலா்கள் 2 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 10:02 PM
பகிர்:

ரயில்வே துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கா் விருதுக்கு மதுரை கோட்டத்தைத் சோ்ந்த ரயில்வே அலுவலா்கள் 2 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ரயில்வே துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மத்திய ரயில்வே வாரியம் மூலம் அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கா் விருது வழங்கப்படுகிறது. 2024- ஆம் ஆண்டு இந்த விருதுக்கு தெற்கு ரயில்வேயில் 8 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இவா்களில், உயா் அலுவலா்கள் பிரிவில் மதுரை கோட்ட ரயில்வே முதுநிலை மண்டல மின் பொறியாளா் மஞ்சுநாத் யாதவ், அலுவலா்கள் பிரிவில் மதுரை ரயில் நிலைய கண்காணிப்பாளா் ஏ.ஜாபா் அலி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டது. வருகிற 21-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் ரயில்வே வார விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட மஞ்சுநாத் யாதவ், ஏ.ஜாபா் அலி ஆகியோரை மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா, அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →