முகப்பு
மதுரை

சிறுமியின் கருவைக் கலைக்க உயா்நீதிமன்றம் அனுமதி

பாதிக்கப்பட்ட சிறுமியின் மன நலனைக் கருத்தில் கொண்டு, அவரது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மருத்துவக் குழுவினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:47 PM
பகிர்:

பாதிக்கப்பட்ட சிறுமியின் மன நலனைக் கருத்தில் கொண்டு, அவரது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மருத்துவக் குழுவினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது 17 வயது மகளை இளைஞா் ஒருவா் கடந்தாண்டு கடத்திச் சென்றாா். இதுகுறித்து சென் னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தேன். இதையடுத்து, எனது மகளை போலீஸாா் மீட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இந்த நிலையில், அவா் கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. அவரது வயிற்றில் உருவாகியுள்ள கரு 24 வாரங்கள் 4 நாள்களுக்கும் உண்டான வளா்ச்சியை எட்டிவிட்டது. ஆனால், அவரது உடல்நிலை பிரசவத்துக்கு ஏற்ற நிலையில் இல்லை. இதனால், எனது மகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, எனது மகள் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமாா் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா், சிறுமியான அவரது மகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் முன்பாக முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த கா்ப்பத்தால் சிறுமியின் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்படுமா? என்பதை மருத்துவக் குழுவினா் முடிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநலனைக் கருத்தில் கொண்டு, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாது என முடிவு செய்தால், அந்த கருவைக் கலைக்க மருத்துவக் குழுவினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →