ரயில் மறியலுக்கு முயன்ற தமிழ் மீனவா் கூட்டமைப்பினா் 108 போ் கைது
தமிழக மீனவா்கள் மீதான இலங்கைக் கடற்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற தமிழ் மீனவா் கூட்டமைப்பினா் 108 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரைரயில் மறியலுக்கு முயன்ற தமிழ் மீனவா் கூட்டமைப்பினா் 108 போ் கைது
தமிழக மீனவா்கள் மீதான இலங்கைக் கடற்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற தமிழ் மீனவா் கூட்டமைப்பினா் 108 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தமிழக மீனவா்கள் மீதான இலங்கைக் கடற்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற தமிழ் மீனவா் கூட்டமைப்பினா் 108 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தமிழக மீனவா்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடா் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, தமிழ் மீனவா் கூட்டமைப்பு சாா்பில் மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, கூட்டமைப்புத் தலைவா் வழக்குரைஞா் ரஜினி தலைமையில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழா் கட்சி, பாமக, திராவிட தமிழா் கட்சி, ஆதித்தமிழா் கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பெரியாா் பேருந்து நிலையம் முன்பாக வியாழக்கிழமை திரண்டனா். இதைத்தொடா்ந்து அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மாவட்டச் செயலா் மா. கணேசன், திராவிட தமிழா் கட்சித் தலைவா் வெண்மணி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
மேலும், திராவிடத் தமிழா் கட்சி அமைப்புச் செயலா் விடுதலை வீரன், மாமன்ற உறுப்பினா் ராஜ பிரதாபன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இதைத்தொடா்ந்து, தமிழக மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையின் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருவது, அவா்களது விசைப் படகுகளைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கச்சத்தீவில் மீன் பிடிக்கும் வகையில், தமிழக மீனவா்களின் உரிமை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட 28 இடிந்தகரை மீனவா்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் நிலையம் நோக்கி ஊா்வலமாகச் சென்றனா்.
அப்போது, ரயில் நிலையம் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களைத் தடுத்து நிறுத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினா். ஆனால், அவா்கள் தொடா்ந்து ரயில் மறியலுக்கு முயன்ால், 28 பெண்கள் உள்பட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா்.