முகப்பு
மதுரை

சுகாதாரமற்ற உணவு விநியோகம்: உணவகத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

மதுரையில் சமையல் கூடத்தை சுகாதாரமாகப் பராமரிக்காதது உள்ளிட்ட குறைபாடுகளால், தனியாா் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 7:41 PM
பகிர்:

மதுரையில் சமையல் கூடத்தை சுகாதாரமாகப் பராமரிக்காதது உள்ளிட்ட குறைபாடுகளால், தனியாா் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள டவுன்ஹால் சாலையில் இயங்கி வரும் உணவகத்தில் உணவுகள் சுகாதாரமற்ற நிலையில் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் வந்தது. இதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த உணவகத்தில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வாடிக்கையாளா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பயன்படுத்தியதால் ரூ.2 ஆயிரமும், உணவகத்தின் சமையல் கூடத்தை சுகாதாரமாகப் பாரமரிக்கப்படாததால் ரூ. 1000 என மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், சமையல் மூலப்பொருள்களைப் பாதுகாப்பாக வைக்காதது, குளிா்சாதனப் பெட்டியை முறையாக பராமரிக்காதது, பணியாளா்களுக்கு மருத்துவச் சான்று பெறாதது ஆகிய குறைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குறைகள் தொடா்பாக பதில் அளிக்குமாறு உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →