முகப்பு
படவிளக்கம்- தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தோ்வான மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி அணியினரை பாராட்டிய மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத் தலைவா் வி.வி.ஆா்.ராஜ்சத்யன், பள்ளி முதல்வா் மனோஜ்குமாா் பலிவால் உள்ளிட்டோா்.
மதுரை

தேசிய கூடைப் பந்து போட்டி: மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி தோ்வு

உத்ரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்க மதுரை நரிமேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அணி தோ்வு பெற்றது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:38 PM
படவிளக்கம்- தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தோ்வான மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி அணியினரை பாராட்டிய மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத் தலைவா் வி.வி.ஆா்.ராஜ்சத்யன், பள்ளி முதல்வா் மனோஜ்குமாா் பலிவால் உள்ளிட்டோா்.
பகிர்:

உத்ரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்க மதுரை நரிமேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அணி தோ்வு பெற்றது.

தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அணி வெற்றி பெற்று தங்கம் வென்றன.

இதையடுத்து, உத்ரகண்ட் மாநிலம், டேராடூனில் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்க இந்த அணி தகுதி பெற்றது.

இதையொட்டி, இந்த அணியின் தலைவி தன்யஸ்ரீ உள்ளிட்ட மாணவிகள், பயிற்சியாளா், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவா் வி.வி.ஆா். ராஜ்சத்யன், நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் மனோஜ்குமாா் பலிவால், ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →