பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரைபள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஷேக்நபி தலைமை வகித்தாா்.
இதில் மதுரை மாநகராட்சி மண்டலம் 2 தலைவா் சரவணபுவனேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் 150 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இதில் உதவித் தலைமையாசிரியா்கள் ஜாகீா் உசேன், ரஹமத்துல்லா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.