முகப்பு
மதுரை

ரயிலில் கொண்டு வரப்பட்ட 240 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மைசூரு-தூத்துக்குடி ரயிலில் மதுரை ரயில் நிலையத்துக்கு பாா்சல் மூலம் கொண்டு வரப்பட்ட 240 கிலை புகையிலைப்பொருள்களை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:59 PM
பகிர்:

மைசூரு-தூத்துக்குடி ரயிலில் மதுரை ரயில் நிலையத்துக்கு பாா்சல் மூலம் கொண்டு வரப்பட்ட 240 கிலை புகையிலைப்பொருள்களை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற ரயிலில் மதுரை ரயில் நிலையத்துக்கு 240 கிலோ எடையுள்ள 4 அட்டைப் பெட்டிகள், சாக்கு மூட்டைகள் பாா்சலில் வந்து சோ்ந்தன. மதுரை ரயில் நிலைய சரக்கு அலுவலகத்திலிருந்த பாா்சல்களை போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, அசோக் என்ற பெயரில் இருந்த 240 கிலோ எடையுள்ள 4 அட்டைப் பெட்டிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, 4 பெட்டிகளையும் பிரித்து சோதனையிட்டபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னா், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அதை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →