கஞ்சா விற்பனை: இருவா் கைது
திருவாடானை அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
திருவாடானை அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை- ஓரியூா் சாலையில் முனியய்யா கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் படி, திருவாடானை காவல் ஆய்வாளா் ஜெயபாண்டியன் தலைமையிலான காவலா்கள் அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணித்தனா்.
அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இருவரும் வைத்திருந்த கைப்பையில் 2 கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் இருவரும் திருவாடானை சமத்துவபுரத்தைச் சோ்ந்த கேசவன் மகன் முத்துக்குமாா் (30), கருப்பையா மகன் விக்னேஷ்குமாா் (31) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.