முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்த போது, இரண்டு விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 5:15 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 9:52 PM

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்த போது, இரண்டு விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 399 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 5:15 AM

இந்த நிலையில், கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே இரவு 7 மணியளவில் ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா், ராமபாண்டி, மகேந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த இரு படகுகளிலிருந்த 16 மீனவா்களையும் கைது செய்தனா்.

Advertisement

இதையடுத்து, இரண்டு விசைப் படகுகளுடன் ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரையும் மயில்வெட்டி துறைமுகத்துக்கு இலங்கைக் கடற்படையினா் அழைத்துச் சென்றனா்.