வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் உருவான மோந்தா புயல் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க மீனவா்களுக்கு 7 நாள்கள் தடை விதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மோந்தா புயல் உருவாகியுள்ளது. இதனால், கடல் காற்று வழக்கத்தை விட வேகமாக வீசும் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க 7 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்பட மாவட்டம் முழுவதும் 1,800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தடையால் ரூ.15 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.