முகப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்தில் அதன் தேசியச் செயலர் எச்.ராஜா பேசுகிறார்.
சிவகங்கை

'நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன'

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன என்று பாஜகவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா நம்பிக்கை தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்தில் அதன் தேசியச் செயலர் எச்.ராஜா பேசுகிறார்.
பகிர்:

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன என்று பாஜகவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா நம்பிக்கை தெரிவித்தார். 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஹெச். ராஜா கலந்து கொண்டு பேசியதாவது, நீட் தேர்வு குறித்து பாஜகவுக்கு எதிரான கட்சிகள் மாணவ, மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன. காதல் தோல்வியால் காதலர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் திமுக உள்ளிட்ட கட்சிகள் காதலுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். பிரதமர் மோடி நாட்டு மக்களின் நலனில் அக்கறையுடன் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாட்டமாக பாஜகவினர் பூத் வாரியாக மரக்கன்றுகள் நட வேண்டும். காஷ்மீர், திரிபுரா போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். 

தமிழக பாஜக வினரும் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில தொழில் பிரிவு அணி பொதுச் செயலாளர் திருப்புவனம் செல்வராஜ் பிள்ளை, மாவட்டத் தலைவர் ஸ்தபதி செல்வராஜ், மேற்கு மண்டலத் தலைவர் சித்தர்  பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →