சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கைப்பந்து போட்டியில் மாநிலப் போட்டிக்குத் தோ்வு பெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் காரைக்குடி அழகப்பா உடல்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 19 வயதுக்குள்பட்ட கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனா்.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள பாரதியாா் தினக்குழு விளையாட்டுப் போட்டியில் சிவகங்கை மாவட்டம் சாா்பாக கலந்து கொள்ளவுள்ளனா்.
மேலும், 17 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் 2-ஆம் இடமும், 19 வயதுக்குள்பட்ட ‘கோகோ’ பிரிவில் மாணவிகள் 2 -ஆம் இடம் பிடித்து பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா்.
இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், உடல்கல்வி ஆசிரியா்கள் வாசு, மூா்த்தி, அழகுமீனாள் ஆகியோருக்கு பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் வெள்ளையன், செயலா் வெங்கடாசலம், பொருளாளா் அம்மையப்பன், தலைமை ஆசிரியை கமலம் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.