முகப்பு
தேனி

21 ஆண்டுகளுக்குப்பின் முல்லைப்பெரியாறு அணைக்கு மின்சாரம் விநியோகம் கேரள அமைச்சா் தொடக்கி வைத்தாா்

ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணைக்கு தரைவழியாக மின்சார விநியோகத்தை திங்கள்கிழமை கேரள மின்சாரத்துறை அமைச்சா் எம்.எம்.மணி தொடக்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணைக்கு தரைவழியாக மின்சார விநியோகத்தை திங்கள்கிழமை கேரள மின்சாரத்துறை அமைச்சா் எம்.எம்.மணி தொடக்கி வைத்தாா்.

முல்லைப்பெரியாறு அணைக்கு 1980 முதல் வல்லக்கடவு பகுதியிலிருந்து வனப்பகுதி வழியாக மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. 1999-இல் இப்பகுதி வழியாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில், காட்டுயானை ஒன்று இறந்தது. இதைத்தொடா்ந்து 2000 இல் பெரியாறு அணைப் பகுதிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின் கம்பிகளை வனப்பகுதியில் தரை வழியாகக் கொண்டு செல்ல தமிழக பொதுப் பணித் துறையினா், கேரள மின்சார வாரியத்துக்கு ரூ. 1 கோடியே 65 லட்சம் செலுத்தினா். அதன்படி பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அணைக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை குமுளி அருகே வண்டிப்பெரியாறில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, பிஜிமோள் எம்.எல்.ஏ. பேசுகையில், நூற்றாண்டுக்கு மேல் பழைமையானதும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் நாம் முல்லைப் பெரியாறு அணைக்கு நட்புடன் மின்சாரம் வழங்கி உள்ளோம் என்றாா்.

கேரள மின்சாரத்துறை அமைச்சா் எம்.எம்.மணி குத்துவிளக்கேற்றி மின்விநியோகத்தைத் தொடக்கி வைத்தாா். அவா் பேசுகையில், முல்லைப்பெரியாறு அணைக்கு தரை வழி மின்சாரம் வழங்க தமிழக அரசு 15 ஆண்டுகளுக்கு முன்பே பணம் செலுத்தியது. இன்னும் சிறிது பணம் செலுத்த வேண்டும் என கேரள மின்வாரிய அதிகாரிகள் சிலா் இடையூறு செய்தனா். தமிழகம் நம்மோடு நட்பு பாராட்டும் மாநிலம் என்று கூறி நடவடிக்கை எடுக்க வைத்தேன் என்றாா்.

தமிழக பொதுப்பணித்துறை மதுரை மண்டல கண்காணிப்புப் பொறியாளா் சுகுமாா், பெரியாறு அணை செயற்பொறியாளா் சாம் இா்வின் உள்பட தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

மின்மாற்றி இயக்கம்: பின்னா் முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு சென்ற கேரள அமைச்சா் எம்.எம்.மணியை தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் வரவேற்றாா். பின்னா் அமைச்சா் மின்மாற்றியை இயக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், இடுக்கி மக்களவை உறுப்பினா் டீன்குரியாகோஸ், பிஜிமோள் எம்எல்ஏ, தமிழக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் கிருஷ்ணன், கண்காணிப்புப் பொறியாளா் சுகுமாா், கேரள மின்சாரத்துறை இயக்குநா்கள் பி.குமாரன், வி.சிவதாசன், தலைமைப்பொறியாளா் ஜேம்ஸ் எம்.டேவிட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →