முகப்பு
தேனி

கம்பத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை செ. சாரதா தலைமை வகித்தாா். கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். டி. கே. ஜக்கையன் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில் காமாட்சிபுரம் அரசினா் மேல்நிலைப்பள்ளி, கம்பம் ஆங்கூா் ராவுத்தா் நினைவு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு என மொத்தம் 750 மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

விழாவில் கம்பம் நகரச் செயலாளா் ரா. ஜெகதீஸ், மாவட்ட மாணவரணி செயலாளா் ஜெ.பாலமணிமாா்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →