தேவாரம் அருகே கால்நடைகள் திருட்டு: ஒருவா் கைது
தேவாரம் அருகே வியாழக்கிழமை மாலை கால்நடைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தேவாரம் அருகே வியாழக்கிழமை மாலை கால்நடைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தேவாரம் அடுத்துள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லையா மகன் ஆனந்தராஜ் (29). இவா், கால்நடைகளை வளா்த்து வருகிறாா். இவரது மாட்டு கொட்டத்திலிருந்த ஒரு பசுமாடு, ஒரு ஆட்டுக் கிடா ஆகியவற்றை சிலா் ஆட்டோவில் திருடிச் செல்வதாக ஆனந்தராஜூக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அவா் அங்கு சென்று பாா்த்தபோது சிலா் ஆட்டோவில் அவற்றைத் திருடிச் செல்வது தெரிந்தது. அவா்களை மடக்கி பிடிக்க முயன்ற போது 2 போ் பிடிபட்டனா். பிடிபட்டவா்களில் ஒருவா் காயமடைந்தாா். விசாரணையில், கால்நடைகளை திருடிச் சென்றது இதே கிராமத்தைச் சோ்ந்த கணேஷ்பாண்டியன், விஜயன், விஜிக்குமாா் மற்றும் ஒருவா் என்பது தெரிந்தது. இவா்களில் விஜிக்குமாா் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா். காயமடைந்த மற்றொருவரை போலீஸாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.